என்னைப் பற்றி..

இணையத்தமிழில் இதுவரை என் முயற்சிகள்

ஈடுபாட்டிற்கான காரணிகள்: தமிழர் உலகின் பல நாடுகளில் வசிக்கின்றனர். அவர்கள் நமது முன்னோர்களின் வளங்களைப் பெறுவதற்கும், அவர்கள் வாழும் நாடுகளின் கலைச்செல்வங்களை, இங்கு கொணர்ந்து வருவதற்கும், எளிமையான சிறப்பான வழி, இணையத் தமிழே ஆகும். உலகில் முன்னேற்றம் கண்டுள்ள பல மொழிகள் கையாளும் வழிமுறை, இணையவழி மொழியாக்கமே ஆகும். அதனைத் தமிழராகப் பிறந்த ஒவ்வொருவரும் அறிதல் வேண்டும். ஆர்வமுடன் இயற்றி, ஈடுபட வேண்டும். உலகெங்கும் வாழும் தமிழர்கள் இதில் ஊக்கத்தோடு ஈடுபடுகின்றனர். தமிழன் என்பதாலும், இணையத்தமிழ்ப் பற்றாலும் தகவலுழவன் என்ற புனைப்பெயரில், இதுவரை நான் செய்த பங்களிப்புகளைக் கீழே சுருக்கிக் கொடுத்துள்ளேன்.

இணையத்தமிழும், பிற மொழிகளும்: இணையத்தில் தமிழ் பல்வேறு வடிவங்களில் இருப்பினும், என்னைக் கவர்ந்தது தமிழ் விக்கித்திட்டங்கள் ஆகும். ஏனெனில், உடனுக்குடன் நாம் மேற்கொண்ட உருவாக்கத்தில், பிறமொழியினர் என்ன செய்துள்ளார்கள் என ஒப்பிட்டுப் பார்த்து, நம் அன்னைத் தமிழை வளர்ச்சியுறச் செய்யவல்ல இணைய நிரல் மொழிக் கட்டகங்களை உடையது ஆகும். ஒப்பீடுகள் மட்டுமே இணையத் தமிழை உயர்த்தும். ஒப்பீடுகள் இல்லையெனில், நம் இனத்தவரின் புகழ்மாலையாகவே இருக்கும்.

தமிழ்விக்சனரி(இணையத்தமிழ்பன்மொழிஅகரமுதலிதிட்டம்): 18 அக்டோபர்2007முதல்இன்றுவரைஒவ்வொருநாளும், தமிழ்விக்சனரியில்பங்களிக்கிறேன். இதுவரைஏறத்தாழ70,000தொகுத்தல்களைச்செய்துள்ளேன். ஏறத்தாழஒருதொகுத்தலுக்கு, ஒருநிமிடம்ஆகும். இன்றளவில்புதுச்சொற்களைஉருவாக்குவதிலும், பிறமேலாண்மைசெயற்பாடுகளிலும்நான்முன்னணியில்இருக்கிறேன். இவையல்லாமல்தானியங்கிகள்மூலம், 4இலட்சம்பராமரிப்புத்தொகுத்தல்களைச்செய்துள்ளேன்.

http://toolserver.org/~quentinv57/sulinfo/%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D

இத்தொகுத்தல்களால் ஏற்பட்ட நிகழ்வுகள் வருமாறு;-

 1. ஏறத்தாழ2,70,000சொற்கள்தமிழ்விக்சனரியில்உள்ளன. அதனால்180மொழிகளில்12ஆவதுஇடத்தில்தமிழ்விக்சனரிஉள்ளது. ஒவ்வொருநாளும்ஏறத்தாழ3000நபர்கள்இணையத்தில்இதனைப்பார்வையிடுகின்றனர். கூகுள்மொழிபெயர்ப்புக்கருவியும்அதிகஅளவுஇதன்தரவுகளைப்பயன்படுத்துகின்றன. இன்னும்பிறதிறவூற்றுத்தளத்திலும்பயன்படுத்துகின்றனர். ஒருசொல்லுக்கானவிளக்கம்எழுத்துவடிவில்மட்டும்அல்லாது, தகுந்தஊடகங்களோடுஉருவாக்கப்பட்டுவருகின்றன. அவற்றில்பெரும்பாலானஊடகஇணைப்புகள்என்னால்அமைக்கப்பட்டவைஆகும்.

 2. தமிழ் விக்சனரி முதற்பக்கத்தில் தினம் ஒரு சொல் என்ற திட்டத்தின்படி, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சொல் தானியக்கமாகத் தெரியும் வகை செய்தவருள், முக்கியப் பங்களிப்பாளனாக அறிவிக்கப்பட்டேன்.

 3. உலத்தமிழ்ச்சொம்மொழிமாநாடுகோவையில்நடந்தபோது, நம்தமிழகஅரசுநன்கொடையாக1,40,000சொற்கள்தமிழ்விக்சனரிக்குஅளித்தது. அங்ஙனம்அளிக்கப்பட்டசொற்களைச்சரிபார்த்துஇல்லாதசொற்களைமட்டும்பதிவேற்றும்பொறுப்புஎனக்குஅளிக்கப்பட்டது. அதனைச்செம்மையாகத்தானியங்கிகொண்டுநிறைவுசெய்தேன்.http://ta.wiktionary.org/s/14rl

 1. கனடநண்பர்களின்சொற்தரவுக்கொடை: கனடநாட்டில்வாழும்தமிழர்கள்அவர்கள்தொகுத்தசொற்களைக்கொடையாகஅளித்தனர். அவற்றினையும்சரிபார்த்து, பதிவேற்றும்பொறுப்புஎனக்குகொடுக்கப்பட்டது. http://ta.wiktionary.org/s/a9w

 2. ஜெர்மன் நண்பர்களின் கொடை: ஜெர்மன் நாட்டில் வாழும் தமிழர், தமிழ்செருமானி அகரமுதலியை உருவாக்கி, வளர்த்து வருகின்றனர். அவற்றின் தரவுகளும் விரைவில் பதிவேற உள்ளன.

 3. இந்தியமொழிகளும்தமிழும்: இந்தோவோர்டுநெட்(Indoword net) தரவுகள்பதிவேற்றம்நடைபெறத்திட்டம்வகுக்கப்பட்டுள்ளது. அதில்5மொழிகளின்ஒலிப்புக்கோப்புகளைஉருவாக்கும்பொறுப்பைநான்ஏற்றுள்ளேன்.

 4. அடிப்படைச்சீனம்தமிழ் அகரமுதலிஒலிப்புக்கோப்புகளும், எழுதும் முறையைப் புலப்படுத்தும் அசைப்படங்களும், தமிழ் விளக்கமும் உள்ளடக்கியது.

தமிழ்விக்கிப்பீடியா:இதுபிறமொழிக்கட்டுரைகளைத்தமிழுக்குமாற்றும்திட்டமாகும். இதில்12அக்டோபர்2007முதல்இன்றுவரைமாதம்4-5முறைகட்டுரைகளுக்காகப்பங்களிக்கிறேன். இதுவரைஏறத்தாழ4,745தொகுத்தல்களைச்செய்துள்ளேன். ஏறத்தாழஒவ்வொருதொகுத்தலுக்கும்10நிமிடங்கள்ஆகும்.

முதல் இந்திய விக்கி மாநாடு: மும்பையில் மூன்று நாட்கள் நடைபெற்ற, முதல் இந்திய விக்கியர் மாநாட்டில், சிறப்பு நிலைப்பெற்ற விக்கிப் பங்களிப்பாளனாகக் கலந்துகொண்டுள்ளேன். அங்கு இந்தியாவின் குறிப்பிடத் தகுந்த விக்கிப் பங்களிப்பான்(NWR) என்ற பெயரைப் பெற்றுள்ளேன். http://wiki.wikimedia.in/File:NWR_2011_and_Jury_mention_V1.0.pdf (காண்க: பக்கம்-18)

பொதுவகமும், தமிழ் ஊடகப் போட்டியும்:

விக்கி ஊடகப்(Commons) பொதுவகம்: இதில் கட்டுரைகளுக்கும், அகரமுதலிகளுக்கும் தேவையான ஊடகங்களைப் பதிவேற்ற வேண்டும். இதனால் உலகின் பிறமொழியினரும் தமிழர் பற்றிய ஊடகங்களை எளிதாகக் காண வகைசெய்யப்படுகிறது. அங்கு காமனிசிட்(commonist) என்ற தானியங்கி பதிவேற்றியையும், விக்கித் தானூலாவி(AWB) என்ற பராமரிப்புக் கருவியையும், கோப்பின் பெயரை மாற்றவும் அணுக்கம்(privilege) பெற்றுள்ளேன்.

இதில்16 செப்டம்பர்2008முதல், இன்றுவரைமாதம்10முறைஊடகங்ளுக்காகப்பங்களிக்கிறேன். இதுவரைஏறத்தாழ9,596தொகுத்தல்களைச்செய்துள்ளேன். ஒவ்வொருதொகுத்தலுக்கும்ஏறத்தாழ15நிமிடங்கள்ஆகும்.

http://commons.wikimedia.org/wiki/User:%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D

இங்குத்தமிழ்ஊடகங்கள்குறைவாகஇருந்ததால், இன்னும்சிலபங்களிப்பாளர்களைக்கொண்டுதமிழ்ஊடகப்போட்டிநடத்தப்பட்டு, ரூ. 50,000வரைபரிசில்கள்வெற்றிபெற்றபோட்டியாளர்களுக்குஅளிக்கப்பட்டன. இதனால்15,091ஊடகங்கள்கிடைத்தன. அவற்றைவிதிப்படிமேலாண்மைசெய்யவும், பராமரிப்புசெய்யவும்பொறுப்பளிக்கப்பட்டஅறுவரில்நானும்ஒருவன். அவற்றில்இருந்துபின்னர், திட்டவிதிகளின்படிபோட்டிமுடிவுகள்அறிவிக்கப்பட்டன. கீழ்கண்டஇணைப்பின்மூலம்அவற்றைஅறியலாம்.

http://ta.wikipedia.org/s/2hs

http://commons.wikimedia.org/wiki/Category:TamilWiki_Media_Contest

கீழ்காணும் இணைப்பில் பல்வேறு நாட்டினரும், மொழியினரும் தமிழ் எழுத்துகளைக் கற்றுக் கொள்ள, நான் உருவாக்கிய 37 அசைப்படங்களைக் காணலாம். இணையத்தில் தமிழ் எழுத்துகளைக் கொண்டு, பிற இந்தியமொழிகளைக் கற்கவும் முடியும். இத்திட்டம் வளர்ந்துவருகிறது.

http://commons.wikimedia.org/wiki/Tamil_alphabet_gallery

http://commons.wikimedia.org/wiki/Category:Animated_GIF_of_Tamil_to_Hindi_alphabet

கீழ்காணும் இணைப்பின் வழியே நான் பல்வேறு சூழல்களுக்கு ஏற்ப பதிவேற்றிய நிழற்படங்களையும், நிகழ்படங்களையும், ஒலிப்புக் கோப்புகளையும் காணலாம்.

http://commons.wikimedia.org/wiki/Special:ListFiles/%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D

விக்கிமூலம்: இதில்காப்புரிமைஇல்லாதநாட்டுடைமையாக்கப்பட்டபடைப்புகள்பதிவேற்றம்செய்யப்படுகிறது. முதல்இன்றுவரைபங்களித்துவருகிறேன். ஒருபங்களிப்பைச்செய்ய20-25 நிமிடங்கள்ஆகும். 21 அக்டோபர்2008முதல்இதில்பங்களிக்கிறேன். இசைத்தமிழ்பற்றியமூலங்களைஇங்குப்பதிவுசெய்கிறேன். இதுவரை130பங்களிப்புகளைச்செய்துள்ளேன்.

இணையநூலகம்: இத்தளத்தில்22 பிப்ரவரி2010 முதல்இன்றுவரைபங்களிக்கிறேன். 3-4மாதங்களுக்குசிலமுறைபங்களிக்கிறேன். இதுவரை1,051பதிவுகளைச்செய்துள்ளேன்.

இணையத்தில்இருக்கும்தமிழ்மின்னூல்களைபெருமளவில்சேகரித்துவைத்துள்ளநூலகம்இணையத்திலும்பங்களிக்கிறேன். இதுவரை500க்கும்மேற்பட்டநூல்களைஇணையத்தில்இலவசமாகவும், எளிமையாகவும்படிக்கத்தேவையானகட்டமைப்புகளை, அத்தளத்தில்செய்துள்ளேன். இதில்50க்கும்மேற்பட்டநூல்கள்என்னால்மின்வருடல்செய்யப்பட்டு, துப்புரவுசெய்யப்பட்டு, மின்னூலாகமாற்றப்பட்டது. மேலும், அங்குள்ளஅயலகம்பகுதியில்80% நூல்களுக்கானஇணையத்தொடுப்புஉருவாக்கம்என்னால்செய்யப்பட்டவையாகும்.

http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D&offset=&limit=500&target=%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D

வளர்ந்து வரும் இணையப் பணிகள்:-

 • கூகுள் அரட்டை அரங்கிலிருந்தபடியே, ஓரிரு சொற்கள் மூலம், அகரமுதலியைக் காணும் நிரல்கட்டகம் அமைக்கப்பட்டுள்ளது.

 • தமிழ் இலக்கியங்களுள் ஒரு சொல்லை எளிமையாகத் தேடவும், அவை உள்ள வரிகள் அனைத்தையும் எடுத்துத்தரவும் வல்ல, மென்மம் உருவாக்கப்பட்டுள்ளது. இவையனைத்தும் திறவூற்று மென்மத்தில் அமைக்கப்படவும், எத்தகைய இயக்குதளத்தில் இயங்கவும் ஆலோசனை நடைபெறுகிறது.

 • திறவூற்று மென்மங்களின் இடைமுகப்பைத் தமிழாக்கம் செய்வதிலும் ஈடுபாடு கொண்டிருக்கிறேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன், லிப்ரே ஆபிசின் மொழிமாற்றத்தில் பங்கு கொண்டவருள் நானும் ஒருவன்.

 • 11-ஆவது உலகத்தமிழ் இணையமாநாட்டின், மக்கள் அரங்கு பொறுப்பாளர்களுள் ஒருவன்.

http://ti2012.infitt.org/ (காண்க:கீழிருந்து ஆறாவது வரி)

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s