ஒலிக்கோப்புகளை உருவாக்க ஒரு அலைப்பேசி செயலி தேவை

கற்றலின் முதற்படி, ஒரு சொல்லை முதலில் கேட்க வேண்டும். அது எம்மொழியாக இருந்தாலும், இதுவே அடிப்படை. தேமதுர தமிழோசை உலகில் பரவ, முதலில் நாம் ஒரு சொல்லின் ஒலிப்பை , ஒலிக்கோப்புகளாக உருவாக்க வேண்டும். இதுபற்றி பல தமிழ் பேராசிரியர்களிடம் கலந்துரையாடிய போது, அலைப்பேசி செயலி ஒன்று மிக மிக அவசியம் என்பது உறுதியானது. இதனால் விக்கிமீடியாப்பற்றிய விழிப்புணர்வினையும் , விரைந்து வளர்க்கலாம். இது பல இந்திய மொழிகளுக்கும் பயனாகும் திட்டமாகும்.

 • சொல்லொன்றின் ஒலிப்பை (pronunciation), ஒலிக்கோப்புகளாக பதிவேற்ற, ஒரு அலைப்பேசி (mobile phone) செயலி இருப்பின் நன்றாக இருக்கும். கணினி வழி செயலியை சீனிவாசன் ஏற்கனவே உருவாக்கியுள்ளார். அதுபோல அலைப்பேசி செயலி ஒன்றை உருவாக்கினால், இந்திய மொழிகள் அனைத்துக்கும் பயனாகும்.
 • பட்டியலை நாம் உரைக்கோப்பில் உருவாக்கி, அதனை பிறருக்கு அனுப்ப அவர் அப்பட்டியலை அவர்கள் அலைப்பேசிக்குள் அமைத்துக் கொள்ள வேண்டும்.
  அப்பொழுதுதான் ஒரே சொல்லை பலர் உருவாக்குதலைத் தடுக்கலாம்.
 • ஒரு சொல்லைப் பதிவு செய்வதற்கு முன், அதனை உருவாக்குனரே சரிபார்க்க வேண்டும்.
 • சரிபார்த்தபின், அவரே பதிவேற்று என்ற வசதியை அழுத்த வேண்டும்.
  ஏனெனில், இணைய இணைப்பு இல்லாநிலையிலும் அது அவரது அலைப்பேசியில் செயற்பட வேண்டும்.
 • இடாய்ச்சு மொழிக்காரர்கள் இரு இலட்சத்திற்கும் அதிகமான கோப்புகளை பதிவேற்றியுள்ளனர்.
 • தமிழ் மொழியில் சோடாபாட்டிலின் தாயார் ஏறத்தாழ 7000 சொற்களைப்  பதிவேற்றியுள்ளார்.
 •  அமலன் என்பவர் ஏறத்தாழ 1000 சொற்களைப் பதிவேற்றியுள்ளார்.
 • இராமகி ஐயாவின் குரலிலேயே, அவரின் சொற்களைப் பதிவேற்ற எனக்கு எண்ணம் மேலோங்குகிறது
 • இலண்டனில் வசிக்கும் பழனிசாமி (Deva Palanisamy,IOS developer)இதற்குரிய முயற்சியில் உள்ளார். இன்னும் சில மாதங்களில் இச்செயலி, 100க்கும் மேற்பட்ட விக்சனரி திட்டங்களுக்குப் பயன்பட உள்ளது.
Advertisements

1 thought on “ஒலிக்கோப்புகளை உருவாக்க ஒரு அலைப்பேசி செயலி தேவை

 1. Pingback: ஒலிக்கோப்புகளை உருவாக்க ஒரு அலைப்பேசி செயலி தேவை | கணிணித் தமிழ்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s