விக்சனரிப் பங்களிப்புகள்

கி.பி. 2013 வருடம்

செப்டம்பர் மாத பதிவுகள்;-

 • 11.09.13 :தாவரவியலில் 5சொற்களுக்கு, படங்கள் மூலம் விளக்கம் தரப்பட்டது.
 • 10.09.13 : மேற்கோளிடலில் உள்ள நிரல்களை, எளிமையாக்கிடல் குறித்த தேடல்.
 • 9.09.13 : ஐக்கியநாடுகளின் (UN)அமைப்பில்  அதிகமாகப் பயன்படும்1052 அஃகுப்பெயர்களை (Acronyms) விரிவாக்கம் செய்து, அவற்றைத்  தமிழ்விக்சனரியின், ஒரு புதிய பகுப்பின் கீழ் பதிவேற்றினேன். விரிவாக்கியச் சொற்களின் முதலெழுத்து ஆங்கிலமேலெழுத்தாகவும் (upper case) , தடிமனாகவும் (bold) அமையவேண்டும். அதற்கு AWB நுட்பம் தான் எளிமையான தீர்வை தந்தது. ஒரு சொல்லுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட விரிவாக்கம் வரும் போது, # போடுவதில் சிக்கல் வந்தது. அதனை அமைக்கவல்ல நிரல்நுட்பம் இல்லாததால், நேரிடியாக ஒவ்வொன்றாக கவனித்து, #சீராக்கத்தை செய்து முடித்தேன்.                                                                                 தமிழ்விக்சனரியின் மொத்த சொற்களின் எண்ணிக்கை =2,83,334
 • 8.09.13 : தமிழகத்தில் அதிகமாகப் பயன்படும்175 தமிழ் சொற்சுருக்கங்களை, விரிவாக்கம் செய்து, அவற்றைத்  தமிழ்விக்சனரியில் பதிவேற்றினேன்.                           தமிழ்விக்சனரியின் மொத்த சொற்களின் எண்ணிக்கை = 2,82,282
 • 7.09.13 : சென்னைப்பேரகரமுதலியின் 100 தமிழ் சொற்சுருக்கங்களுக்கு, விரிவாக்கம் செய்து, அவற்றைத்  தமிழ்விக்சனரியில் பதிவேற்றினேன்.                           தமிழ் விக்சனரியிலிருந்த, மொத்த சொற்களின் எண்ணிக்கை =  2,82,105
 • 6.09.13 : சென்னைப்பேரகரமுதலியின் 315 தமிழ் சொற்சுருக்கங்களுக்கு, விரிவாக்கம் செய்து தமிழ்விக்சனரியில் பதிவேற்றினேன்.(இன்று தமிழ் விக்சனரியிலுள்ள மொத்த சொற்களின் எண்ணிக்கை = 2,82,005
 • 5.09.13 : சென்னைப்பேரகரமுதலியில்  (Tamil Lexicon 1924-1936. காப்புரிமை அற்றது. இந்திய பதிப்புரிமை 60 வருடங்களேஆகும்.) பயன்படுத்தப்பட்டுள்ள, ஏறத்தாழ1000 சொற்குறிப்புகள் பட்டியலிடப்பட்டு, இங்கு பகுப்பிடப்பட்டன.
 • 4.09.13 : இன்று ஆங்கில விக்சனரியின் பகுப்புகளோடு (1.English_initialisms, 2.English_abbreviations,  3. English_acronyms) தமிழ் விக்சனரியின் பகுப்புகள் இணைக்கப்பட்டு சரிபார்க்கப்பட்டன. விக்கியிடைத் தானியங்கிகள் செயல்பட இவ்விணைப்பு முக்கியம். விக்கித்தரவுத் தளத்துடன் (Wikidata) இவைகள் இணைக்கப்பட்டு மேம்படுத்தப்பட வேண்டும். அப்பொழுதே விக்சனரியின் ஏறத்தாழ180மொழிகளோடு, இவைகள் என்றும் இணைக்கப்பட்டிருக்கும்.
 • 3.09.13 : நேற்றிரவு சரியாக உறங்காததால், காலை பணப்பணி செய்யவில்லை. ஆனால், நீண்டநாட்களாக சென்னை அகரமுதலியில் எடுத்தாளப்பட்டுள்ள மேற்கோள் நூல்களையும், அதன் ஆசிரியர் பெயர்களையும் பட்டியலிட்டேன். இப்பட்டியலில் சென்னைப்பேரகரமுதலியில் மேற்கோளிடப் பயன்பட்ட நூல்கள் (36 ஆங்கிலநூல்களும், 326 தமிழ் நூல்களும்) அடங்குகின்றன.
 • 2.09.13 : இன்று இரவு அடைமழை காற்றுடன் 21/2மணிநேரத்திற்கும் மேல் பெய்தது. இரவு முழுவதும் மின்தடை. வரும் வார  நீர் தட்டுபாட்டை சமாளிக்க சுறுசுறுப்புடன், வீட்டினுள் இருந்து  நீர் பிடிக்க ! , இயங்கினோம்.
 • 1.09.13 : தமிழ் விக்சனரியில்  7 தமிழ்ச் சொற்களையே பதிவேற்றம்  செய்தேன்.                    (இன்று தமிழ் விக்சனரியிலுள்ள மொத்த சொற்களின் எண்ணிக்கை = 2,81,686 )

தொழில்நுட்பத் தேவை: மூன்று மணி நேரங்கள் செலவு செய்து உருவாக்கிய ~190 சொற்களில், 7தவிர  மற்ற சொற்கள்,  ஏற்கனவே பலரால் பதிவேற்றப்பட்டிருந்தன. எனவே, சிவப்புச்சொற்களை மட்டும் பிரித்தெடுக்க கற்க வேண்டும். அதற்கு Vlookup முறை, spreadsheet இல் இருக்கிறது.ஆனால், அது விரும்பிய பலனைத் தரவில்லை. அந்நுட்பம் குறையுடையதாகவே இருக்கிறது.

அதனால் தான், கோவையில் நடைபெற்றசெம்மொழி மாநாட்டில் (2009) தமிழக அரசு  கொடுத்த 1,28,000 சொற்ளில், 52,000 மட்டுமே விக்சனரியில் பதிவேற்றினேன். மீதமுள்ள 76,000 சொற்கள் ஏற்கனவே விக்சனரியில் பதிவேற்றம் செய்து இருந்தனர். இதனை சரிபார்க்க ஏறத்தாழ 55மணிநேரங்கள் தேவைப்பட்டன.

இவ்வாறு பலமணிநேரங்கள்,  இனி வீணாகாமல் இருக்க எளிமையான, வன்மையான தொழில்நுட்பம் தேவை. அத்தொழில்நுட்பம் சிவப்புச்சொற்களை மட்டும், அதன் விவரங்களோடு, (விக்சனரியில் சொல் உருவாக்கம்) பிரித்தெடுத்துத் தரவேண்டும். அதுஎன்ன?

ஆகத்து மாதத்தில் பதிவேற்றியச் சொற்கள்;-

 • 31.08.13 : தமிழ் விக்சனரியில்  160 தமிழ்ச் சொற்களை பதிவேற்றம் செய்தேன். (இன்று தமிழ் விக்சனரியிலுள்ள மொத்த சொற்களின் எண்ணிக்கை = 2,81,679)
 • 30.08.13 : தமிழ் விக்சனரியில்  100 தமிழ்ச் சொற்களை பதிவேற்றம் செய்தேன். (இன்று தமிழ் விக்சனரியிலுள்ள மொத்த சொற்களின் எண்ணிக்கை = 2,81,513)
 • 29.08.13 : தமிழ் விக்சனரியில்  100 தமிழ்ச் சொற்களை பதிவேற்றம் செய்தேன். (இன்று தமிழ் விக்சனரியிலுள்ள மொத்த சொற்களின் எண்ணிக்கை = 2,81,415)
 • 28.08.13 : தமிழ் விக்சனரியில்  100 தமிழ்ச் சொற்களை பதிவேற்றம் செய்தேன். (இன்று தமிழ் விக்சனரியிலுள்ள மொத்த சொற்களின் எண்ணிக்கை = 2,81,301)
Advertisements